புதன், 18 ஜனவரி, 2012

5


أَلَمْ يَرَوْاْ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ مَّكَّنَّاهُمْ فِي الأَرْضِ مَا لَمْ نُمَكِّن لَّكُمْ وَأَرْسَلْنَا السَّمَاء عَلَيْهِم مِّدْرَارًا وَجَعَلْنَا الأَنْهَارَ تَجْرِي مِن تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُم بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِن بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ 6

இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம். அவர்கள் மீது தொடர்ந்து வானத்தை மழை பொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம். 6:6



 மாயாஜாலத்தில் வீழ்ந்து கிடக்கும் மானுடம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இதற்கு முன் அசந்துப் போகும் அதிசயம் என்ற தலைப்பிட்டு ஒட்டகத்திற்குள் அமைந்திருக்கும் இறைவனுடைய அற்புதத்தை பல தொடர்களாக தொடர்ந்து எழுதி இருந்தோம். ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி இறைவன் ஆய்வு செய்யச் சொல்கின்றான் எந்த சமுதாயத்தைப பார்த்து இறைவன் கூறினானோ அவர்களுக்கு முந்திக் கொண்டனர் ஏகஇறைவனுடைய வல்லமைக்கொப்ப ஏற்றுக் கொள்ள மறுக்கும் சமுதாயத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.

உலகம் முடியும் காலம் வரை நிலைத்திருக்கக் கூடிய அதிசயமே இறைவன் புறத்தில் நிகழத்திக் காட்டக் கூடிய அற்புதம்.

அதுபோன்ற அற்புதங்களைக் கண்டு நமது வாழ்வை சீரான வழியில் அமைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

இல்லை என்றால் இறைவனுடைய புறத்திலிருந்து அதிர வைக்கும் அதிபங்கர சம்பவம் ஏற்பட்டால் அதிலிருந்து தப்ப முடியாது.

இது இறைவனுடைய வல்லமையால் நிகழ்த்தப்பட்டது தான் என்று அப்பொழுது தெரியவரும் அப்பொழுது இந்த ஒரு தடவை இதிலிருந்து தப்பிக்க வைத்து விட்டால் அதன் பிறகு இறைவளை அவனுடைய வல்லமைக்கொப்ப நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்து நமது வாழ்வை மறுமை வெற்றிக்காக அமைத்துக் கொள்வோம் என்று நினைத்தால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது.

10:49. ''அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

மாயாஜாலத்தில் வீழ்ந்து கிடக்கும் மானுடம்
இறைவன் புறத்திலிருந்து நிகழ்ந்த அற்புதங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மக்கள் மனிதர்கள் நிகழ்த்திக் காட்டும் சில கண்கட்டி வித்தைகள்> மாயஜாலங்களில் அதிக ஆர்வம் காட்டுகி;னறனர் ஷைத்தான் இப்படித் தான் தூண்டுவான்.

உதாரணத்திற்கு ''ஹாரி பாட்டர்'' எனும் கற்பனை மாயாஜாலக் கதையில் ஏராளமான மக்கள் தங்களுடைய பொண்ணான நேரத்தை வீணடித்துக் கொண்டதை எடுத்துக் கொள்ளலாம்.

விற்பனையில் மிகப் பெரிய சாதனைப் படைத்த அந்த நாவலில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் வெறும் கற்பனையே ???

அமெரிக்கா> ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நூல்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. முதல் நாளிலேயே 1 கோடி புத்தகங்கள் விற்று விட்டதாக கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் ஹாரி பாட்டர் நூல்கள் படுவேகமாக விற்றன. இந்தியாவிலும். சென்னையில் 'லேண்ட்மார்க்' உள்ளிட்ட சில பிரபல நிருவனங்களிலும் விலை அதிகம் (ரூ. 975) என்றபோதிலும் கூட பலரும் ஆர்வத்துடன் நூல்களை வாங்கிச் சென்றனர் உலகச் சிறுவர்களின் மனம் கவர்ந்த மாயாஜால மந்திர நாயகனான ஹாரிபாட்டர் சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்து விட்டான் என்று ஆஹா ஓகோ வென்று ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதித் தள்ளின.

மதிமயங்கி மாயாஜாலத்தில் வீழ்ந்து தங்களுடைய பொண்ணான நேரத்தை வீணடிப்பவர்கள் உண்மையில் இறைவனுடைய புறத்தில் நிகழ்த்தப்படும் அதிசயத்தை ஏற்றுக் கொள்;ளத் தயங்குகின்றனர்.

மூஸா(அலை) அவர்களுடைய காலத்தில்
மூஸா(அலை) அவர்கள் மூலமாக ஏகஇறைவன் சில அற்புதங்களை செய்து காட்டினான் அந்த அற்புதங்களைக் கண்ட மக்களில் மிகக் குறைவானவர்களே இது இறைவன் புறத்திலிருந்து நிகழ்த்தக் கூடிய அற்புதமே ! சாதாரண மனிதர்களால் இதை நிகழ்த்திக் காட்ட முடியாது என்று நம்பினர். அதுவும் அவ்வாறு நம்பி;க்கைக் கொண்டவர்கள் யார் தெரியுமா ?

அதிசயங்கள்> அற்புதங்கள் எனும் பெயரில் மந்திர> தந்திர> மாயாஜால வித்தைகளை செய்யும் ஃபீல்டில் நின்று மக்களுடைய கண்களைக் கட்டி வயிற்றுப் பிழைப்பு நடத்தியவர்களேயாவார்கள்.

கொத்தும் குலையுமாக ஓரிடத்தில் ஒட்டு மொத்தமாக இறைவன் புறத்திலிருந்து நிகழ்த்திய அதியற்புதத்தை கண்டு விழிப் பிதுங்கி ஏகஇறைவன் ஒருவனே! என்று வீர முழக்கமிட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அதிசய வரலாறு எஜிப்தில் நிகழ்ந்தது.

அது நிகழ்ந்ததற்கான அத்தாட்சி இன்றும் எஜிப்திய அருங்காட்சியகத்தில் மக்கள் பார்த்து விகைக்கும் அதிசயப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது.

கடவுள் இல்லை> நானே கடவுள் என்றுக் கூறி மக்களை தனக்கு சிரம் பணிய வைத்தவனையே உலக அதியசயத்தை சுற்றிப் பார்க்கும் மக்களுடைய கண்களுக்கு அதிசயப் பொருளாக்கினான் ஏகஇறைவன்.  

இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் சில அற்புதங்களை மக்களுக்கு செய்து காட்டினார்கள் அவற்றை அந்நாட்டு மன்;னன் ஃபிர்அவுன் சூனியம் என்றுக் கூறியதுடன் எஜிப்து நகரின் மொத்த சூனியக் காரர்களும் அரன்மனைக்கு வரவழைக்கப்பட்டு இறைத்தூதர் செய்யும் அற்புதத்தை கூனியம் தான் என்று நிரூபிக்க முற்பட்டான்.

மாந்திரீகர்களும்> இறைதூதரும் எதிரும் புதிருமாக இருக்க மன்னன் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்க முதலில் இறைதூதர் மாந்திரீகர்களை நோக்கி நீங்களே முதலில் தொடங்குங்கள் என்றுக் கூறுகிறார்கள். (முதலில்) நீங்களே போடுங்கள் என்று மூஸா கூறினார் அவர்கள் (தமது) வித்தைகளை போட்ட பொழுது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்> மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்கள்> பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தார்கள் 7:116

அவற்றைப்பார்த்ததும் மன்னனும்> மாந்திரீகர்களும்> பார்வையாளர்களும் குதூகலமடைகின்றனர்.

நிச்சயமாக இறைவன் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்டுவான் என்று இறைதூதர் கூறிக்கொண்டார்கள் அதன் பின் தனது கைத்தடியை எறியும் படி இறைவன் இறைதூதருக்கு செய்தி அனுப்புகிறான். உமது கைத்தடியைப் போடுவீராக ! என்று மூஸாவுக்கு அறிவித்தோம் உடனே அது அவர்கள் செய்து காட்டிய வித்தையை விழுங்கியது. 7:117

எத்தனை மாந்திரீகர்கள் வரவழைக்கப்பட்டனர்> அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையை கற்றிருப்பர் அத்தனையையும் இறைதூதருடைய கைத்தடியிலிருந்து வெளிப்பட்ட அற்புதம் ஒன்றுமில்லாமல் துடைத்தெறிந்துவிட்டது இதைப்பார்த்ததும் அவ்விடத்திலேயே இறைதூதர் மூஸா(அலை) அவர்களும்> அவர்களுடைய சகோதரர் ஹாரூன் அவர்களும் ஏற்றுக்கொண்ட இறைவனை நாங்களும் ஏற்றுக்கொண்டோம் என்றுக் குழுமி இருந்தவர்கள் மொழிந்தனர் அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர். 121>122

அவ்வாறான அதிசயத்தைக் கண்ணால் கண்டப் பின்னரும் கூட அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை.

மாயாஜால ஃபீல்டில் இருந்து மக்களை ஏமாற்றியவர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டனர்.

கடவுள் இல்லை>
நானே கடவுள்>

என்றுக் கூறி மக்களை ஏமாற்றி தனது ஆட்சிக் கட்டிலை காப்பாற்றுவதற்காக பிரகடனம் செய்த மன்னன் கூற்றை மக்கள் ஏற்றனர் அதனால் இறுதியில் அவனுடன் மக்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.

இறைவனுடைய அற்புதத்தைப் பார்த்து நம்பிக்கை கொண்ட மந்திரவாதிகளுடன் மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் இறைக் கோபத்திலிருந்து தப்பித்திருப்பார்கள் மறுத்ததனால் மன்னனுடன்  மக்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்

பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில்
1400 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை பெருமானார்(ஸல்) அவர்கள் இறைச்செய்தியை மக்களுக்கு எத்தி வைத்திக் கொண்டிருக்கையில் மக்;கள் அவர்களிடம் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுங்கள் என்றுக் கேட்ட பொழுது அதற்கு முன் தோன்றிய நபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்களை விட பிரம்மாண்டமாக சந்திரனை இருக் கூறாகப் பிளக்கச் செய்து இறைவன் காட்டினான். 

இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (நபிகளார் இறைத்தூதரே என்பதற்கு) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும் படி கோரியதன் பேரில் நபி(ஸல்) அவர்கள்> சந்திரன் பிளவுபடுவதை அவர்களுக்குக் காட்டியது. நூல்: புகாரி3636. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்'' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். நூல்: புகார 3637. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள்.

மக்காவாசிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே> சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள். நூல்: புகாரி 3638. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்.

மேற்கானும் சம்பவங்களை உண்மைப்படுத்தும் விதமாக சந்திர மண்டலத்தில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்க் குழுவினர்கள் சந்திரனை பலகோணங்களில் படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தனர் அதில் சந்திரனில் காணப்பட்ட பிளவானப் பகுதியைப் பார்வையிட்டு அது ''அரேபியன் கிராஸ் '' என்றப் பெயரையும் அதற்கு சூட்டினர்.

கீழ்கானும் புகைப்படம் அமெரிக்காவின் வின்வெளி ஆய்வு நிருவனம் நாஸா (NASA) 1969-ம் வருடம் அனுப்பிய அப்போலோ-10 மற்றும் அப்போலோ-11 ஆகிய இரு செயற்கைகோல்கள் மூலம் எடுக்கப்பட்டது. படத்தில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதுமாக சுற்றியுள்ளது.

 
சந்திரனில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதும் சுற்றியுள்ளது. இக்கோடு ஒரு காலத்தில் சந்திரன் இரண்டாக பிளந்து பின்பு ஒன்றாக ஒட்ட வைக்கப்பட்டதை ஒற்றதாக உள்ளது. அதாவது ஒரு பொருள் இரண்டாக உடைந்த பின் அதனை ஒட்டுவதற்கு பற்ற வைத்து சீல் வைத்தது போல் உள்ளது. சுப்ஹானல்லாஹ் இறைவன் தூயவன்.

இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் முஸ்லிம் கட்சியின் தலைவர் டேவிட் மூஸா பிட்குக் (David Moosa Pidcook) கூறுகிறார் : இப்புகைப்படக் காட்சி பிபிசி தொலைக்காட்சியில் மூன்று நாஸா விஞ்ஞானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் காட்டப்பட்டது.

இவ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்திரனை சுற்றிலும் காணப்படும் இக்கோடு ஒரு காலகட்டத்தில் நிலவு இரண்டாக பிளந்து பின்பு ஒட்ட வைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என அவ்விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேற்கானும் நிலவு இரண்டாகப் பிளந்த சம்பவம் நடைபெறும் போது உலகின் பல பாகங்களிலும் அது காட்சி அளித்தது

நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தாட்டிய இவ் அற்புதத்தை அக்கால கட்டத்தில் வாழ்ந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி சேர பெருமான் "ஃபர்மாஸ்" இதனைக் கண்டுள்ளார். இது சம்பந்தப்பட்ட முழு ஆதாரங்கள் லண்டன் மாநகரிலுள்ள இந்திய நூலகத்தில், பழங்கால கையால் எழுதப்பட்ட பிரதிகளில் காணப்படுகிறது. அதன் குறிப்பு எண் (Ref.No : Arabic, 2807,152-173.) இதனை M. ஹமீதுல்லா எழுதிய "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நபியின் இவ் அற்புதத்தை மலபாரில் கண்ட சக்கரவர்த்தி சேர பெருமான் "ஃபர்மாஸ்", மறுநாள் தனது அரசவையில் இதுபற்றி விசாரித்ததில், அவையிலுள்ள அரசு வானசாஸ்திரிகள், "இது அரபு நாட்டில் கடவுளின் தூதர் ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிவிக்கும் முன்னறிவிப்பு" என அவருக்கு சொல்லப்பட்டது. அத்துடன் தனது மகனை தனது சார்பாக அரியணையில் ஏற்றிவிட்டு, நபி(ஸல்) அவர்களை சந்தித்து அவர்களின் திருக்கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவ நாடி புறப்பட்டார். நபியை சந்தித்து இஸ்லாத்தை தழுவிய பின் வரும் வழியில் எமன் நாட்டிலுள்ள "ஜஃபர்" என்ற துறைமுக நகரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் அடக்கஸ்தலம் இன்னமும் எமன் நாட்டிலுள்ள "ஜஃபர்" என்ற துறைமுக நகரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் அடக்கஸ்தலம் இன்னமும் எமன் நாட்டில் உள்ளது.

இறைவன் புறத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட மேற்கானும் அற்புதங்கள் இன்றும் உலகின் பல பாகங்களில் அவனுடைய அத்தாட்சியை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான் என்று டார்வின் ஐந்து வருடங்கள் கப்பலில் பயணித்து  வன விலங்குகளை ஆய்வு செய்து அறிவித்ததாக இறைமறுப்பாளர்கள் கூறுவார்கள்.

நாம் கேட்கிறோம்

குரங்கிலிருநு;து மனிதன் பரிணமித்தான் என்றால் குரங்கு இனம் அழிந்து விடவேண்டும் ஆனால் அது அப்படியே இருக்கிறது.

குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்றால் மனிதனிலிருந்து வேரொன்று பரிணமிக்க வேண்டும் ?

மனிதனும் லட்சக் கணக்கான வருடங்களாக அப்படியே இருக்கிறான் !

ஒன்றிலிருந்து மற்றொன்று மாறிக் கொண்டிருப்பதற்கு பெயர் தானே பரிணாமம்.

இதைக் கேட்டால் ஒரே ஒரு வரியில் நம்மை மதவாதி என்று பதில் கூறுவார்கள் .

அதனால் ஏகஇறைவனிடமிந்து நிகழ்த்திக் காட்டபட்ட அற்புதங்கள் இன்று வரையிலும் வேறு எவராலும் நிகழ்த்திக் காட்ட முடியாத அற்புதங்களாக இருப்பதால் அதைக் கொண்டு இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்;ளவேண்டும்

மீறினால் இறைவன் புறத்திலி;ருந்து நிகழ்த்தப் பட்ட அதிபயஙகர நிகழ்வுகளால் கடந்த காலங்களில் பேரழிவு ஏற்பட்டு பெரும் பெரும் சமுதாயங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் சுனாமியின் சில அலைகளுக்கு பல்லாயிரக் கணக்கானோர் பலியானதைப் பார்த்தோம் மனித சக்திகளால் அதை தடுத்து நிருத்த முடியவில்லை. முடியாது.

இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம். அவர்கள் மீது தொடர்ந்து வானத்தை மழை பொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம். 6:6

இறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை.
இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப பரப்புவோம்.

இனவெறி,
மொழி வெறி கடவுள் அருளிய மாரக்கத்தில் இல்லை.

 'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.

'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,

நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்' என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். நபிமொழி
 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக